சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் லோனி நகரில் உள்ள பப்லூ கார்டன் கொலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

முதவல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவிப்பு
இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 10 மாத குழந்தை உள்பட 6 பேரும் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர்.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களில் நால்வர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகவும், ஏனைய இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதவல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam