எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
எரிவாயு விலை அதிகரிப்பு
இதன்போது அவர் கூறுகையில், லாஃப்ஸ் எரிவாயுவின் விலைக்கு நிகராக லிட்ரோ எரிவாயுவின் விலையும் உயர்த்தப்படும் என வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
அத்துடன் எரிவாயுவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை - லிட்ரோ தலைவர் அறிவிப்பு |
வெளியாகியுள்ள செய்தி
தாய்லாந்தின் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவை நிறுத்தி, இதற்கு முன்னர் இலங்கைக்கு எரிவாயுவை விநியோகித்த ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாகவே சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சியாம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதை விடவும், ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்யும் போது, ஒரு மெற்றிக் தொன்னிற்கு 34 டொலரை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.