வாழைச்சேனையில் தாழ் நிலங்கள் வெள்ளக்காடாக காட்சி(Photos)
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழ் நிலப்பிரதேசங்கள் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளமாகக் காணப்படுவதுடன், சிலரது வளவினுள் நீர் காணப்படுவதுடன் நீர் வழிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றது.
மழை தொடர்ச்சியாகப் பெய்து வருமாக இருந்தால் தாழ் நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் தாழக்கூடிய நிலைமை உருவாகக்கூடும்.
மட்டக்களப்பில் 54.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப்பகுதியில், 66.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 27.2மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 70.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 88.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
உன்னிச்சைப் பகுதியில் 25.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 23.7மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 91.9மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 30.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
19அடி 2அங்குலம் கொள்ளளவுடைய வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 16அடி 8 அங்குலமாகவும், 11அடி 6அங்குலம் கொள்ளளவுடைய கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 11அடி 8 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
புணாணை அணைக்கட்டின் நீர்மட்டம் தற்போது 7அடி 7அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாகத் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பகுதிகள் தாழ் நிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
பல உள்ளூர் வீதிகளிலும், வெள்ள நீர் தேங்கியுள்ளதினால் மக்கள் உள்ளூர்
போக்குவரத்துக்களிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.




நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
