மொட்டுக்கட்சியின் கீழ் மட்டத்திலும் பாரிய பிளவு-சுதந்திர மக்கள் காங்கிரஸில் இணையும் பலர்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெரும்பாலானவர்கள், சுதந்திர மக்கள் காங்கிரஸில் இணைய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
மொட்டுக்கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட முடியாது

ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய விரும்பாத பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இவ்வாறு சுதந்திர மக்கள் காங்கிரஸில் இணைய தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர மக்கள் காங்கிரஸில் இணைவது தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
“ எமக்கு தற்போது மொட்டுக்கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட முடியாது. நாங்கள் அந்த கட்சியில் இருந்து விலகி இருக்கின்றோம்.எமக்கு தேவையான எமது நோக்கங்களை மொட்டுக்கட்சியில் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனது.
இதனால், மக்களுக்கு சேவை செய்யவும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸில் தேர்தலில் போட்டியிட முறை ஒன்றை ஏற்படுத்தி தருங்கள்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொட்டுக்கட்சியினர் பலருக்கு சுதந்திர மக்கள் காங்கிரஸில் வாய்ப்பு

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஊடாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இது சம்பந்தமான பேச்சுவார்த்தை பல உள்ளூராட்சி சபை பிரதேசங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ஹொரணை, முலடியன, களனி, வாரியபொல, மீரிகம ஆகிய பிரதேச சபைகளை சேர்ந்த பல உறுப்பினர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 15 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri