திடீரென சுற்றிவளைக்கப்பட்ட காதலர்கள் - இளம் பெண் கைது : பொலிஸார் மீது தாக்குதல்
கம்பஹாவில் 12 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெயங்கொடயை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெயங்கொட பொலிஸ் பிரிவின் மாரபொல பகுதியில், பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று மாலை நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம் பெண் கைது
இந்தக் கைது நடவடிக்கையின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளம் பெண்ணின் காதலனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபர் வாளால் தாக்கியதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
சந்தேக நபரின் தலைமறைவான காதலனை கைது செய்ய வெயங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
