கொழும்பிற்கு அழைத்து வரவழைக்கப்பட்டு மாணவிகளுக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் பெற்றோர்
மொனராகலை பகுதியை சேர்ந்த ஒரே வகுப்பில் கல்வி பயிலும் 14 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவிகளை கொழும்பிற்கு அழைத்துச் சென்று தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான காதலர்கள் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய மேசன் தொழிலாளர்களாகும்.
மாணவிகளுக்கு நேர்ந்த கதி
குறித்த இரண்டு இளைஞர்களும் மாணவிகளை பேருந்து மூலம் கொழும்பிற்கு அழைத்து சென்று, வாடகை அறையில் வைத்து தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பெற்றோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து மாணவிகள் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மாணவிகள் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்காக சியம்பலாண்டுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களும் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
you may like this video