மட்டக்களப்பில் இறந்த காதலியின் இறுதிச் சடங்கில் புகுந்து தாலி கட்டிய காதலன்
மட்டக்களப்பில் உயிரிழந்த தனது காதலிக்கு தாலி கட்டிய காதலன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்து வருட காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குறித்த யுவதி தவறான முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த ஜோதிகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
10 வருட காதலுக்கு பெற்றோர் மறுப்பு
உயிரிழந்த யுவதியின் பத்து வருட காதலுக்கு, அவர்களது பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில் யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, யுவதியின் இறுதிக் கிரியை நடக்கும் போது யுவதியின் வீட்டுக்கு வந்த அவரது காதலன் தனது காதலிக்கு தாலி கட்டியுள்ளார்.
இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.



