யாழில் பரீட்சை காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள்
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று வைரவர் ஆலயத்தில் க.பொ.த சாதாரண தர பரீடசை ஆரம்பித்த நாள்முதல் ஆறு நாட்களாக ஒலிபெருக்கிகளின் ஒலியால் பரீட்சையினை எதிர்கொண்டுள்ள மாணவர்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக அன்றைய பாடத்தினை இறுதி மீட்டல் செய்யும் நேரமான காலை 6.15 மணி தொடக்கம் ஒலிபெருக்கி மூலம் ஒலியெழுப்பப்படுவதால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பரீட்சை காலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தமுடியாது என கூறப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவு
எனினும் பல இடங்களில் குறிப்பாக இளவாலை பொலிஸ் பிரிவிலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளிலும் இக்கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை தவிர்ந்த காலங்களிலும் ஆககூடியது நான்கு ஒலிபெருக்கிகள் மட்டும்தான் பாவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதுவும் 1980ஆம் ஆண்டு, 924/12 ம் இலக்க சுற்றாடல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சத்தத்தின் எல்லை (Noise Level) பகல் நேரத்தில் 55 dB எல்லையை தாண்டாமலும் இரவு நேரத்தில் 45 dB எல்லையை தாண்டாமலும் இருக்கவேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி இவ்வாலயத்தில் ஆறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலியெழுப்பப்படுவது தொடர்பில் இளவாலை பொலிஸாரிடம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திடமும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அண்மைக்காலங்களிலும் இதே பிரிவில் சில வணக்கஸ்தலங்களில் இவ்வாறான சட்ட மீறல்களை பொதுமக்கள், பொலிஸாருக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலருக்கும் தொலபேசி மூலம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவளை ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளினாலும் ஒலிபெருக்கிகள் குறித்த கட்டுப்பாடுகளும் அவை தொடர்பில் பொதுமக்கள் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்களும் அந்தந்த பிரதேச செயலர்களால் செயலகங்கிளின் உத்தியோகபூர்வ முகநூல்கள் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டபோதும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் அவ்வாறு எவையும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
