அதிஷ்டலாப சீட்டுகளை இருமடங்கு விலை கொடுத்து வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி செய்தி
அதிஷ்டலாப சீட்டுகளில் வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் மேலும், அதிஷ்டலாப சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் அதிஷ்டலாப சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது ஒரு அதிஷ்டலாப சீட்டு 20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரிக்கும் பரிசுத் தொகை

இதன் விலை இருமடங்காக அதிகரிக்குமாயின் அதிஷ்டலாப சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 6ஆம் திகதி முதல் உரிய விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்த விடயம் மீள பரிசீலிக்கப்பட உள்ளது.
எனவே விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் திகதி தொடர்பில் இந்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan