இலங்கையரின் செயலினால் நெகிழ்ச்சியடைந்த சுவிட்சர்லாந்து பெண்
தம்புள்ளை - இராஜமகா விகாரையை தரிசிப்பதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை மறந்துச்சென்ற சம்பவமொன்று நேற்று (20) பிற்பகல் பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த ஜோஹன்னா என்ற பெண் தனது கையடக்கத் தொலைபேசியை தொலைத்துவிட்டு பெரும் சிரமப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று உரிமையாளரிடம் கைத்தொலைப்பேசியை தொலைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர் தனது கைப்பேசி எண்ணை புத்தகத்தில் பதிவு செய்திருந்ததால் அந்த எண்ணுக்கு அழைப்பினை எற்படுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்து பெண் நெகிழ்ச்சி
இதன்போது குளியாபிட்டிய பிரதேசத்திலிருந்து யாத்திரைக்கு வந்த வஜிர ஜயமுனி என்ற சாரதி கையடக்க தொலைப்பேசி தன்னிடம் உள்ளதாகவும், அதனை வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த வெளிநாட்டு பெண் ஹோட்டல் உரிமையாளருடன் சென்று கைப்பேசியை பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை மக்கள் மிகவும் நல்லவர்கள் என்றும், முதன்முறையாக இலங்கைக்கு தான் வந்துள்ளதாகவும், இலங்கை மக்களுக்கு தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் வெளிநாட்டு பெண் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam