கச்சத்தீவால் கடல் விளை நிலங்களை இழக்க வேண்டிய நிலை! தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தம் போதாது : டக்ளஸ்
கச்சத்தீவு எமக்குரிய கடற்பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நாம் 80 வீதமான கடல் விளை நிலங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மாநாட்டில் கச்சத்தீவை மீட்போம் என நேற்று முன்தினம்(18.08.2023) தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியாவில் தேர்தல் வரப்போகிற நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக கச்சத்தீவு தொடர்பில் கருத்துக்கள் எழுவது வழமையான செயல்பாடு.
உடன்படிக்கை
1974 ஆம் ஆண்டு இருநாட்டு கடற்றொழிலாளர்களும் இலங்கையிலும் இந்தியாவிலும் கடற்றொழிலில் ஈடுபடலாம் என ஒரு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ் உடன்படிக்கை மூலம் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் ஆறு கடற்றொழில் படகுகள் இந்தியா கடற்பரப்புக்குள் சென்று தொழிலில் ஈடுபட்டு வந்தன.
1974 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை 1976 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்தியக் கடற்பரப்புக்குள்ளும் இந்தியா கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள்ளும் நுழைய முடியாது என உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கை மூலம் கச்சதீவு கடற்பரப்பிலிருந்து இந்தியா வெளியேறிய நிலையில் இந்தியா கடற்றொழிலாளர்களின் வலைகளை உலர்த்துவதற்கும், கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கு பெற்றுவதற்கும் தடை ஏற்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், உடன்படிக்கை மூலம் கச்சத்தீவு எமக்குரிய கடற் பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கச்சத்தீவைக் காட்டிலும் 80 மடங்கு கடல் விளை நிலங்களை நாம் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எல்லை தாண்டிய கடற்றொழில்
இந்தியா கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய கடற்றொழிளால் வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
ஆனால் இந்திய தரப்பில் கூறும் போது கடற்றொழிலுக்குச் சென்ற இந்திய கடற்றொழிலாளர்களை சிங்கள இராணுவம் மற்றும் சிங்களக் கடற்படை கைது செய்வதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
நான் இவர்களுடைய பிரச்சாரத்தின் உண்மை நிலை தொடர்பில் பலமுறை இந்திய மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் தெரிவித்துள்ளேன்.
ஆனால் வடபகுதியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு
முதலமைச்சருக்கும், இந்திய பிரதமருக்கும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை
கடற்பரப்புக்குள் ஆத்துமீறி தொழில் நடவடிக்கையையில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள் என்ற உண்மையை அழுத்தமாக
தெரிவிக்க வேண்டும்.
ஆகவே கச்சதீவு விவகாரம் தேர்தல்கள் வரும் போது பேசு பொருளாக மாறுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 17 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
