நுவரெலியாவில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி - சிகிச்சையின் பின் சாரதி கைது
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில், சுமார் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த லொறியின் சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்த நிலையில் வாகனத்தை இயக்கியதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றுமுன்தினம்(25.04.2026) இடம்பெற்றுள்ளது.
போதைப் பொருள் பாவனை
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள், லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில், லொறி சாரதியிடம் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் சாரதி, ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற ஒரு லொறி பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 100 அடி ஆழமுள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri