நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக விபத்து
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது.
லொறியின் சாரதி காயம்
லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அருகில் இருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதத்திற்குள்ளானது. தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் அலுவலகமே இவ்வாறு சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - தீபன்












பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri