யாழில் வர்த்தக நிலையத்தின் மீது மோதி விபத்திற்குள்ளான வாகனம்(photos)
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கண்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதி பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி இன்று(13.04.2023) இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென காற்று வெளியேறியதால் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள இரு வர்த்தக நிலையங்கள் மீது மோதியுள்ளது.

மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு
இதன்போது குறித்த வாகனத்தில் பயணம் செய்த சாரதியின் உதவியாளர்கள் இருவர் கைகள் மற்றும் தலைகளில் காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கடையினுள் புகுந்த வாகனத்தினை பிரதேசவாசிகள்
மீட்டுள்ளதுடன் விபத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.



10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam