இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வரிசையிலேயே பலர் தங்கள் இரவைக் கழித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 12 மணி நேரமாக வரிசையில் காத்திருந்தும் பணம் செலுத்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் வரிசைகள்
அதிகாரிகளின் மெத்தன போக்கு மற்றும் திறமையின்மை காரணமாகவே வரிசைகள் மீண்டும் உருவாகியுள்ளதாக அங்குள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனினும் 24 மணிநேர கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவையின் ஊடாக நீண்ட வரிசை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், தற்போது வழமையான முறையில் அந்த சேவைகள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.