டீசலை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசை: 150 பேருக்கு மட்டுமே டோக்கன் (Photos)
யாழ்.வடமராட்சி - மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினமும் டீசலை பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து டீசல் விநியோகம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் பருத்தித்துறை பொலிஸாரால் 150 வாகனங்களுக்கு மட்டுமே இலக்கங்கள் வழங்கப்பட்டு டீசல் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

டோக்கன் இன்றியும் காத்திருக்கும் வாகனங்கள்
ஆனாலும் பல வாகனங்கள் இலக்கங்கள் பெற்றுக்கொள்ளாத நிலையில் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு டீசல் வழங்க முடியாது என பருத்தித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருந்துகள் மற்றும் தீர்ப்பார் வாகனங்களுக்கு ரூபா 15000 ரூபாவுக்கும் ஏனைய இலகுரக வாகனங்களுக்கு ரூபா 10 ஆயிரத்திற்கும் டீசல் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri