அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்கப்படும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!
நீண்ட தூரப் பேருந்துகளுக்கான அடிப்படை தரப் பரிசோதனை தொடர்பில் அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதன்படி, நீண்ட தூரப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு முன்னதாக அடிப்படை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த செயல்முறையை அடுத்த மாத தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றறிக்கை
அத்துடன், நீண்ட தூர சுற்றுலாப் பேருந்துகளும் குறித்த தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள், 48 மணி நேரத்திற்கு முன்பு தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.
இதன் முதல் கட்டமாக, கொழும்பிலுள்ள பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தை மையமாகக் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான வழிமுறைகள் ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.




