லண்டன் மேயர் தேர்தலில் வெற்றிபெற போவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்
2021 லண்டன் மேயர் தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ள நிலையில், முன்னணி தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பு தொடர்பான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஏப்ரல் மாதம் 13ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த கருத்துக்கணிப்பு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி தொழிற் கட்சி வேட்பாளர் சாதிக் கான் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஆரம்ப கருத்துக் கணிப்புகள் அவரது ஆதரவு எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றன.
சாதிக் கானைத் தொடர்ந்து அவரது நெருங்கிய போட்டியாளரான Shaun Bailey இருப்பதாகவும், தற்போதைய மேயர் முன்னர் வெற்றி பெற்றிருந்த பகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வகையில், 50 சதவீத வெற்றியைப் பெறும் என்ற தொழிற்கட்சியின் நம்பிக்கையை தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு அடுத்தபடியாக Liberal Democrats கட்சியின் வேட்பாளர் Luisa Porritt எட்டு சதவீதத்துடனும், பசுமைக் கட்சியின் (Green Party) வேட்பாளர் Sian Berry ஆறு சதவீதத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.