இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! புகைப்படத்தை வெளியிட்டு லண்டன் பொலிஸார் கோரிக்கை
லண்டனில் கார் விபத்தில் சிக்கி 50 வயது நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தொடர்பில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி இந்த சாலை விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினை நேரில் பார்த்தவர்களிடம் குறித்த தகவலை திரட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பார்க் ராயல், பாரெட்ஸ் கிரீன் ரோடு பகுதியில் அதிகாலை 3.24 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லண்டன் பொலிஸார் கோரிக்கை
கருப்பு நிற BMW கார் இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து வெளியேறியுள்ளது.
இருப்பினும், குறித்த சாரதியை மாநகர பொலிஸாரால் அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறப்படுகி்ன்றது.
இந்த நிலையிலேயே அந்த விபத்தை நேரில் பார்த்ததாக பெண் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அவர் விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரல்ல என குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவரிடம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri

அமெரிக்காவின் வரி விதிப்பு... முதல் முறையாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க் News Lankasri
