லொஹான் ரத்வத்தேவின் ராஜினாமா தொடர்பில் சட்டத்தரணி சுனில் வடகல விடுத்துள்ள கோரிக்கை
வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்களுக்காக, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ராஜினாமா செய்தமை, போதுமானதாக இல்லை. அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில். முன்னிலைப்படுத்த வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
சட்டத்தரணி சுனில் வடகல இன்று செய்தியாளர் சந்திப்பின் போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை விதிமுறைகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தாக்குதல் ஆயுதங்கள் சட்டத்தை மீறியுள்ளார் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் ஒழுங்கற்ற நேரத்தில் போதையில், சிறைச்சாலைக்குள் நுழைந்து அனுராதபுரம் சிறையில் உள்ள சில கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக வட்டகல குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றங்கள் அல்லது சில சட்டவிரோத செயல்கள் அல்லது திருட்டுகளில் ஈடுபடுவோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வது அல்லது கொள்ளையடித்த பணத்தை திருப்பிச் செலுத்தும் மோசமான போக்கு இலங்கையில் உள்ளது என்றும் அது ஒரு நல்ல நடைமுறை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பேரவையின் அமர்வுகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு அமைச்சரின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் இலங்கையை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan