அமைதியிழந்த லொஹான் ரத்வத்த : அமைதிப்படுத்திய அளுத்கமகே
நாடாளுமன்றத்தில் இன்று எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை(Lohan Ratwatte) கட்டுப்படுத்த முயன்றாா்.
பசளை விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அளுத்கமகே எதிர்க்கட்சியினருடன், வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டார்.
இதன்போது அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ரத்வத்த, எதிர்க்கட்சியினருக்கு எதிராக தகாத வாா்த்தையை பயன்படுத்தி கூச்சலிடுவதைக் காணமுடிந்தது.
எனினும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ரத்வத்த எழுந்து நின்று எதிரணியினருக்கு எதிராக சத்தமிட்டாா்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri