தெற்கு கடற்பரப்பில் கொடிய மீனினம்: மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்த 'லோடியா' என்ற ஆபத்துக்குரிய மீன் இனம் தற்போது தெற்கு கடற்பரப்பில் பரவியுள்ளதாக தேசிய விஷ கட்டுப்பாட்டு தகவல் மையம் அறிவித்துள்ளது.
இந்த மீனினம் மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், மனித உடலில் படும்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என விஷ கட்டுப்பாட்டு மையத்தின் பிரதம நிபுணர் வைத்தியர் ரவி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த மீனை ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை கடலில் காணலாம் என்று கூறப்படுகிறது.
மருத்துவர் எச்சரிக்கை
இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீளமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மீனை தொடுவதன் மூலம், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து உயிரச்சுறுத்தல் நிலைக்குச் செல்லலாம் எனவும், இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
