சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் உள்ளூராட்சி மன்றங்களே - சிறீதரன்
உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதே சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட அக்கராயன் வட்டாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும்.
நம்பிக்கை
அத்தகைய சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களை இம்முறையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுவதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


