ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமானம்
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டஉறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த நிகழ்வு நேற்று(02) நடைபெற்றுள்ளது.
நான்கு உள்ளூராட்சி மன்றங்கள்
இதன்போது வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டனர்.
குறித்த சத்தியபிரமாண நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,கூட்டணியின் செயலாளர் நாகலிங்கம் ரட்ணலிங்கம், தமிழீழமக்கள் விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தரான க.சந்திரகுலசிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் க.துளசி,தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
