சாக்குப்போக்குச் சொல்லாமல் தேர்தலை உடன் நடத்துங்கள்! - ரணில் அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கே ஏன் இப்படி அஞ்சுகின்றது என கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தப் பின்னடிக்கும் இந்த அரசு, மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை எப்படி நடத்தப் போகின்றது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசின் கடமை
சாக்குப்போக்குக் காரணங்களைக் சொல்லாமல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களின் வாக்குரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது என்றும், மக்கள்
ஆணைக்கு வழிவிடுவது அரசின் கடமை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன்
சுட்டிக்காட்டினார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
