மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்கள் பதிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும், வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன்.தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அமைதியான முறையில் வாக்களிப்பு
மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பின் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற தேர்தலில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடனும் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.

வாக்களிப்பு நேரம் முடிவடைந்த பின் பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் தங்கி இருக்க வேண்டும்.
பிற்பகல் 4.30 மணிக்கு பிறகு 144 தெரிவு செய்யப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் அதன் பின்பு பொதுமக்களின் வட்டார வாக்குகளும் எண்ணப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan