தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி முயற்சி: ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு (Photos)

Mannar Ranil Wickremesinghe Local government Election
By Ashik Jan 20, 2023 05:26 PM GMT
Report

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல சின்னங்களிலும் போட்டியிடுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஆளுங்கட்சி மேற்கொண்டுள்ள போதும்,  இந்த தேர்தலை எப்படியாவது பிற்போட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி குறியாக இருக்கிறது” என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (20.01.2023) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன்,

தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி முயற்சி: ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு (Photos) | Local Government Election Ranil

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டி

மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு மூன்று சபைகளை நாம் கைப்பற்றினோம்.

மக்களின் அதிகபட்ச ஆதரவில் இந்த வெற்றியை நாம் பெற்றுக் கொண்டோம். நாம் அமைத்த சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேர்மையாகப் பணியாற்றி மக்களுக்கு இயன்றளவு சேவைகளை செய்துள்ளனர்.

தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி முயற்சி: ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு (Photos) | Local Government Election Ranil

அந்த வகையில், இம்முறை தேர்தலிலும் நாம் அதிக ஆசனங்களையும் சபைகளையும் கைப்பற்றுவதற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

தேர்தலை நிறுத்த வேண்டும்

இந்தத் தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ஆளுங்கட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பல சின்னங்களிலும் போட்டியிடுவது போன்று ஒரு தோற்றப்பாட்டை ஆளுங்கட்சி மேற்கொண்டுள்ள போதும் இந்த தேர்தலை எப்படியாவது பிற்போட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றது.

எனினும், ஜனநாயக ரீதியில் இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி முயற்சி: ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு (Photos) | Local Government Election Ranil

தேர்தல் செலவீனம் தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்று நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அது தேர்தலை நடத்துவதில் சிக்கலை உருவாக்கும் ஆரம்ப நடவடிக்கையாக இருக்கவும் முடியும்.

எனினும் ஐந்து தினங்களுக்குள் அந்த விடயங்கள் முடிக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடு இருப்பதனால் தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு இருக்கிறது. அதை மீறி தேர்தல் பிற்போடப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

May you like this Video


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US