உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு விசாரணை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிவரை பிற்போட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஓய்வுபெற்ற கேர்னல் டப்ளிவ் எம்.ஆர் விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
மனு தாக்கல்
தேர்தலைப் பிற்போடும் நீதிப்பேராணையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளதாகவும் இதன்போது உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் இரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
