தேர்தல் நடத்துவதா இல்லையா என்பது இரண்டு நாட்களில் தெரியும்! தேர்தல் ஆணைக்குழு தலைவர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவதா இல்லையா என்பது இரண்டு நாட்களில் தெரியவரும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள திறைசேரி ஆணையாளரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
மேலும் தேர்தல் நடத்துவது குறித்து உயர் நீதிமன்றம் இரண்டு நாட்களில் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலுக்கு தேவையான அச்சிடும் நடவடிக்கைகள் அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
