மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் - பிரதி முதல்வரை தெரிவு செய்த தமிழரசுக் கட்சி
மட்டக்களப்பு மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சி தேர்வு செய்துள்ளது.
இதன்படி, மாநகர சபையின் முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் முதல் இரண்டு வருடங்களுக்கு தலைவராக பதவி வகிப்பார்.
மேலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு துரைசிங்கம மதன் தலைவராக செயற்படுவார்.
பதவியை பகிர்வதற்கு தீரமானம்
கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதுடன், மாநகர தலைவர் பதவியை பகிர்வதற்கும் இவ்வாறு தீரமானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதி முதல்வர் பதவியும் பகிரப்பட்டுள்ளது.
இதற்கமைய முதல் இரண்டு வருடங்கள் டினேஸ் பிரதி முதல்வராகவும், அடுத்த இரண்டு வருடங்கள் ரகுநாதன் பிரதி முதல்வராகவும் செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
