உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
தேர்தலில் வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவான ஒருவர் பிரசாரத்தின் போது, பொதுமக்களுக்கு பணம் வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்படுமாயின் அவர் தமது பதவியை இழக்க நேரிடும் என பெஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தைப் பின்பற்றி தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட வேண்டியது சகல வேட்பாளர்களினதும் பொறுப்பாகும்.
வேட்பாளர் உறுதிப்படுத்த வேண்டிய விடயம்
எனவே, தங்களது பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாம் தகுதியானவர் என வேட்பாளர் நிரூபிக்க வேண்டும்.
அத்துடன், ஊழல் இன்றி பொது சொத்துக்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படக்கூடியவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தேர்தலுக்காக கையூட்டல் வழங்கும் வேட்பாளர் ஒருவர், தேர்தல்களில் வெற்றி பெற்றதன் பின் அந்த பணத்தை வசூலிப்பதற்காக செயற்படுவார் என்ற விம்பத்தை மக்களிடையே தோற்றுவிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri
