உள்ளூராட்சி தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல்:சிறீதரன் எம்.பி தெரிவிப்பு
விடுதலை நோக்கிய பயணத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (26) காலை கையளித்திருந்தனர்.
இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி
அவர் மேலும் தெரிவிக்கையில், பூநகரி பிரதேச சபைக்கான பதினொரு வட்டாரத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறோம்.
கடந்த தேர்தல்களிலும் பதினெரு வட்டாரங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இம்முறையும் வெற்றி பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan
