உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஏப்ரல் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட நாட்களாகக் கருதப்படும் எனவும், இந்த நடவடிக்கைகள் ஏப்ரல் 29ஆம் திகதி வரை தொடரும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை விநியோகம்
அதன்படி, ஏப்ரல் 16ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது.
இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் 7 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் இந்த நடவடிக்கைகள் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஆவணம்! முற்றிலுமாக நிறுத்தபட்ட இலங்கைக்கான உதவி திட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் - |
