உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முடிவு
“எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்துக் கூட்டாகப் போட்டியிடவே விரும்புகின்றோம்.
இது தொடர்பில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தும் என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாகவும் அதனை எவ்வாறு நாங்கள் எதிர்கொள்ளலாம் என்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது பரிசீலிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஏனையோரையும் இணைத்துக் கொள்ளலாமா என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது.
ஆனால் இப்பொழுது தெளிவாகவே நாங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். அதாவது ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேசி முடிவெடுப்பதென தீர்மானித்து உள்ளோம்.
அதேநேரம் இரண்டு கட்சி தலைவர்களுடன் நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
