உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஆணைக்குழுவுடன் விரைவில் பேச்சு: சஜித்துக்குப் பிரதமர் பதில்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை விரைவில் அழைத்துப் பேச்சு நடத்த எதிர்பார்த்துள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24.03.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள்
இதற்கமைய நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் நான் கருத்துக் கூற முற்படவில்லை. எனினும்,
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாட
எதிர்பார்க்கின்றேன். விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
