தமிழ் கட்சிகளே சபை அமைக்கும் நிலை காணப்படுகிறது: சித்தார்த்தன் தெரிவிப்பு!
தமிழ் கட்சிகளே சபை அமைக்கும் நிலை காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஸ்கந்தவரோதயா கல்லூரியில் தனது வாக்கினை அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமது உள்ளூர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொருத்தமான நபரை தெரிவு செய்வதற்காக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் கட்சிகள்
அந்தவகையில் எமது கட்சியை பொறுத்தவரை வெற்றிக்கான வாய்ப்புகள் எங்குமே பிரகாசமாக காணப்படுகிறது.
பல சபைகளை நாங்கள் கைப்பற்றுவதற்கு ஏதுவான நிலை காணப்படுகிறது. அத்துடன் இன்றைய சூழ்நிலையில் ஜேவிபிக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
சபை அமைக்கின்றபோது தமிழ் கட்சிகள் சேர்ந்து தான் சபை அமைக்கின்ற நிலைமை காணப்படுகிறது. இதுவே நடக்கும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
