தொழில்முனைவோருக்கு கடன் நிவாரணம் - அரசாங்கம் விசேட நடவடிக்கை
தொழில்முனைவோரின் கடன் தவணைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரச வங்கிகளின் தலைவர்களுக்கு இராஜாங்க நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரச வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சகத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நிவாரணங்கள் குறித்து அவசர அறிக்கை
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அரச வங்கியின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய உரிய சலுகைகளை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வங்கி முறையைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து அவசர அறிக்கையை வழங்குமாறும் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.