இலங்கை அரசால் புறக்கணிக்கப்பட்ட சீனா: உள்நுழைகிறது இந்தியா
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (lng) வழங்குவதற்காக சீனா-பாகிஸ்தான் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட கேள்வி பத்திரத்தை இரத்து செய்து, சர்வதேச திறந்த போட்டி ஏல முறை மூலம் நிறுவனமொன்றை தேர்வு செய்யப்பட்ட பின்னர் குழாய் வலையமைப்பை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் மின் உற்பத்தி செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சீனா-பாகிஸ்தான் எங்ரோ கூட்டமைப்பு கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.
எனினும், கடந்த திங்கட்கிழமை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, "நாட்டில் இயற்கை எரிவாயு உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான தேசிய எரிசக்தி கொள்கையை மறுபரிசீலனை செய்தல்" என்ற தலைப்பிலான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து, தற்போதைய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொள்முதல் செயல்முறையை இடைநிறுத்தியுள்ளார்.
அமைச்சு நடவடிக்கை
முன்னதாக இந்த கேள்விப்பத்திரத்தை சீனா-பாகிஸ்தான் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், செயல்முறை தாமதமானதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் குறித்த கேள்விப்பத்திரத்தை இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இவ்வாறு கேள்வி பத்திரத்தை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அந்த நடவடிக்கையை தாமதப்படுத்தியதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், இறுதியாக, உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இந்த கேள்வி பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |