பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிப்பு!
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை, காமன்வெல்த், மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, எலிசபெத் ட்ரஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போது, அப்போது பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் விடுமுறையில் சென்றிருந்தார்.
அத்துடன், ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் வெளிநாட்டுப் படைகளை வாபஸ் பெறுவதை கையாண்டதற்காக ராப் கடந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையிலேயே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே, வெளியுறவுத்துறை செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதான ட்ரஸ் இதற்கு முன் சர்வதேச வர்த்தக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டொமினிக் ராப் தற்போது, நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து துணைப் பிரதமர் பதவியையும் வகிக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
