பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை விபரம் வெளியானது
பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரிவு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ் நேரத்தை வீணடிக்காது தனது அமைச்சரவையை நியமிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.
இதன்படி, லிஸ் டிரஸின் ஆதரவாளர்களை கொண்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமராக பதிவியேற்றுக்கொண்ட லிஸ் டிரஸ் இன்று மாலை தனது அமைச்சரவையை அறிவிக்கத் தொடங்கினார்.
இதன்படி சுகாதாரச் செயலாளராகவும் துணைப் பிரதமராகவும் தெரேஸ் காஃபி நியமிக்கப்பட்டுள்ளார். குவாசி குவார்டெங் புதிய நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் பதவியில் நீடித்த பென் வாலஸ்
சுயெல்லா பிராவர்மேன், உள்துறைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். உள்துறை அமைச்சராக பதவி வகித்த ப்ரீத்தி படேல் நேற்று தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.
பாதுகாப்பு செயலாளராக பென் வாலஸ் அதே பதவியில் நீடித்துள்ளார். பிராண்டன் லூயிஸ் நீதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் வடக்கு அயர்லாந்து செயலாளராக இருந்தார்.
இதேவேளை, நாதிம் ஜஹாவி Duchy of Lancaster அதிபராகவும், அரசுகளுக்கிடையேயான உறவுகளுக்கான அமைச்சராகவும், சமத்துவ அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிஷி சுனக் பதவி விலகியதை தொடர்ந்து அவர் நிதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
