இந்திய கலாசாரம் மிக்க தளத்தை நிலைகுலைய வைத்த ஈரான்.. Natanz தாக்குதலுக்கு மிரள வைக்கும் பதிலடி
இந்திய வம்சாவளி மக்களின் செழிப்பான கலாசாரத்தை கொண்ட சிறிய இந்தியா என அழைக்கப்படும் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள Dimona நகரம், ஈரான் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்த நிலையில், ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் டிமோனா நகரத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல், நடான்ஸ் அணுசக்தி தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக மோசமான தாக்குதல்
நேற்று மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 10 வயது சிறுவன் ஒருவர் தீவிரமாக காயமடைந்துள்ளதுடன், 40 வயது பெண் ஒருவர் நடுத்தர காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் இராணுவம், டிமோனா மற்றும் அராட் நகரங்களைத் தாக்கிய ஏவுகணைகளை தடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.
டிமோனா நகரம், சுமார் 7,500 இந்திய வம்சாவளி யூதர்கள் வசிக்கும் இடமாகும். இது நகர மக்கள் தொகையில் சுமார் 30 வீதம் ஆகும். இங்கு மராத்தி, இந்தி மொழிகள் பேசப்படுவது வழக்கம்.
கிரிக்கெட் விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், கடைகளில் சோன்பப்டி, குலாப் ஜாமுன், பாப்ப்ரி சாட், பெல்பூரி போன்ற இந்திய உணவுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மத்தியக் கிழக்கு போர்ச் சூழலால் இலங்கை வியாபாரிகள் செய்யும் மோசடி! களமிறக்கப்படும் புலனாய்வாளர்கள்..
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam