நாஹினியை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமிகள்! விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்
தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகையை பார்ப்பதற்காக மூன்று சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஹிங்குராங்கொடையிலிருந்து 13,11,7 வயது சிறுமிகள் மூவர் நாஹினி நடிகையை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி சென்றுள்ளனர்.
குறித்த சிறுமிகள் பேருந்து ஒன்றில் ஏறி யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்தெரியாமல் தடுமாறி பின்பு வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தமையால் பொலிஸார் சிறுமிகளிடம் விசாரணையை மேற்கொண்ட வேளை சிறுமிகள் நாஹினி சிவன்யாவை பார்ப்பதற்காக சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமிகள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாகவும்,சிறுமிகள் நடிகையை பார்க்க செல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திட்டத்திற்கமைய,பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா சென்று பார்க்கலாம் எனவும்,யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் சிறிய தூரம் என அவர்கள் கருதியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமிகள் மூவரும் தொலைக்காட்சி தொடர்களிற்கு அடிமையானவர்கள் என்றும்,தொலைக்காட்சி தொடர்களில் தோன்றுபவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே பெற்றோர் தமது குழந்தைகளின் நடவடிக்கை குறித்து விழிப்புடன் செயற்படுமாறும், அவர்களின் நடவடிக்கை குறித்து விளிப்புடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



