லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் புதிய முறைமை: வெளியானது விசேட அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் மேலும் கூறுகையில்,
டொலர்கள்
குறித்த புதிய முறைமை மூலம் நிறுவனத்திற்குத் தேவையான டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க முடியும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக மிகவும் குறைந்த தொகையான 15 டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.
அத்துடன் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது செய்தித்தொகுப்பு,