லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு
லிட்ரோ நிறுவனம் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலக சந்தையின் விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலையினை திருத்துவதற்கான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் புதிய விலைகள்
இந்த நிலையிலேயே, லிட்ரோ நிறுவனம் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அரசாங்கம் அறிவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் கடந்த மாதம் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்திற்கு ஏற்ப புதிய விலைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
