லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது.
புதிய விலை விபரங்கள்

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதுடன், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பிற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4610 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1850 ரூபாவாகும்.
மேலும், புதிய விலை திருத்தத்திற்கு அமைய 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 860 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam