எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு (Video)
லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலை திருத்தம் நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (04.11.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு கையிருப்பு
மேலும் கூறுகையில், தற்போது லிட்ரோ எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், எரிவாயு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
சில விநியோகஸ்தர்கள் உரிய நேரத்தில் முன்பதிவுகளை மேற்கொள்ள தவறியதால், தற்போது சில இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் முழுமையாக தீர்க்கப்படும்.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan