எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்றைய தினம் (29.10.2022) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இலங்கையை வந்தடைந்துள்ள கப்பல்
அவர் மேலும் கூறுகையில், இன்று காலை மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி நாளைய தினம் (30.10.2022) ஆரம்பமாகும்.
எரிவாயு விலை குறைப்பு
இதேவேளை உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
you may like this video...





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
