லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம்! வெளியான புதிய விலைப்பட்டியல்
உலகளாவிய மோதல்களின் தாக்கத்தால் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதையடுத்து, லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் வீட்டு பயன்பாட்டு எல்.பி. (LP) எரிவாயு விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் இறக்குமதி செலவுகள் பெரிதும் அதிகரித்துள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை திருத்தம்
அதேவேளை, எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தையும், அதிகரித்து வரும் வாழ்வாதாரச் செலவையும் கருத்தில் கொண்டு, முழு சுமையையும் நுகர்வோருக்கு மாற்றாமல், விலை உயர்வை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.
12.5 கிலோ சிலிண்டர்: 775 ரூபாவினால் உயர்ந்து 4,765 ரூபாவாகவும், 5 கிலோ சிலிண்டர் . 308 ரூபாவினால் உயர்ந்து 1,910 ரூபாவாகவும், 2.3 கிலோ சிலிண்டர் 140 ரூபாவினால் உயர்ந்து 890 ரூபாவாகவும் உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தீவிரமான விநியோகத் தடைகள் ஏற்படாதவாறு போதுமான எரிவாயு கையிருப்புகள் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காக ஆர்டர் செய்யப்பட்ட 38,000 மெட்ரிக் டன் எல்.பி. எரிவாயு தற்போது மாலைத்தீவில் மிதக்கும் சேமிப்பில் இருப்பதால், நாடு முழுவதும் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
மேலும், Luigi Galvani கப்பல் 20,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் மாலத்தீவை அணுகி வருவதாகவும், Freycinet கப்பல் தென் அமெரிக்காவிலிருந்து மேலும் 20,000 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிச் செல்கின்றதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவை மே மாதம் வரை சீரான விநியோகத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும் இடையறாத விநியோகத்தை உறுதி செய்வதில் நிறுவனம் உறுதியாக உள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam