லிட்ரோ நிறுவனத்தின் கோரிக்கை: இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை- செய்திகளின் தொகுப்பு
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்ற இறக்கமான எரிவாயு விலை மற்றும் டொலரை கருத்தில் கொண்டு விலை சூத்திரமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை உயர்வினால் ஏற்பட்ட நட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் செலுத்த வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதால், எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்களை அந்த நுகர்வோர் மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படாமையால், கடந்த 8ஆம் திகதி இலங்கை வந்திறங்கிய கப்பலில் நேற்றும் எரிவாயுவை இறக்க முடியவில்லை. இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று சந்தைக்கு வெளியிடப்போவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது. எரிபொருளுக்காக பொது மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,



