எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள விநியோகத்தர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சிலிண்டர்கள்
இதன்படி, நாட்டில் நேற்று முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்திருப்பதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உரிய எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
